Sunday, November 10, 2013

அப்பறவை



மெளனித்த ஒரு பொழுதில்
பிடிதளர்ந்த ஓர் நொடியில்
நகர்ந்து விட்டிருந்தது
கண் தெரியாத சிறுபறவை
குரல் செவிக்கெட்டாத தூரத்திற்கு..........

பார்வையிலிருந்து மறைவதை
மெளனமாக படம்பிடிக்கிறேன் மங்களாய்
கண்ணீரால் நிரம்பிய கண்களில்

பிடிதளர்ந்த அந்த நொடி
நிராகரிப்பாய் உணர்ந்திருக்குமோ????
மனம் உடைந்திருக்குமோ?????
என்ன உணர்வுகளால் சூழ்ந்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு இதயம்?????

பிடிதளர்ந்தது நிராகரிப்பால் அல்ல
என்னுள் ஆழ்ந்துபோனதால் என்பதை
உணர்த்தவேனும் ஓரு நொடி அதிகமாய்
என்னுடன் இருந்திருக்கலாம் அப்பறவை.

17 comments:

  1. பறவையை பற்றிய உங்கள் பார்வை அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சத்யா.....இது பறவையை மட்டுமல்ல...சகமனிதர்களுக்கும் பொருந்தும் பல சூழல்களில்.

      Delete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் மிக அருமையாக உள்ளது நல்ல கற்பனை வளம்...... மேலும் பல கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள்.

    நேரம் மின்சாரம் இருந்தால் நம்ம பக்கமும் வாருங்கள்
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்..கண்டிப்பா வரேன்....ஜனவரில இருந்து அதிக நேரம் ஒதுக்குகிறேன்

      Delete
  3. கவிதை அருமை ...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க...இனி தொடர்ந்து வாங்க.

      Delete
  4. ##பிடிதளர்ந்தது நிராகரிப்பால் அல்ல
    என்னுள் ஆழ்ந்துபோனதால் என்பதை
    உணர்த்தவேனும் ஓரு நொடி அதிகமாய்
    என்னுடன் இருந்திருக்கலாம் அப்பறவை## என்ன செய்வது சில நேரங்களில் நம்மை உணர்த்தக் கூட அவகாசமின்றி நிகழ்வுகள் நடந்தேறிவிடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க....அது போல் நிறைய சூழல்களை கடந்து தானே இங்கே நிற்கிறோம்.

      Delete
  5. உள்ளத்துள் ஆழ்ந்த பறவை ஒருக்காலும் விட்டு விலகாது

    ReplyDelete
    Replies
    1. ஹஹா சுமன்...உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை

      Delete
  6. ஹஹஹா.....குமார்....கவிதைனு சொல்லிட்டீங்களே...அதுக்கே கோடி நன்றி பார்சல்

    ReplyDelete