Saturday, September 15, 2012

விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி

 
 
 


நிந்தன் கோபத் தாகத்திற்கு காதல்மொழிகள்
பலியாகி வறண்டு கிடக்கிறது மனம் பாலைவனமாக
உன் நினைவுகளை உயிரில் சுமந்து, அமைதித்
தூதுவனாக நம் காதலை அனுப்புகிறேன்.

காரணமும் தெரியாமல் செய்யப் போகும்
காரியமும் புரியாமல்,வானம் நோக்கும்
பூமியாக தவமிருக்கிறேன் உன் வருகைக்காக.

மெல்லினமாய் இசையெழுப்பிய நீ இன்று
வல்லினமாய் மாறி இம்சிக்கிறாய் - வருந்தி
உள்ளத்தில் ஊமையாய் அழுவதை அறியாயோ

களிப்பாவில் துவங்கிய நம் பயணம் எங்கேயோ
தளை தட்டி முகாரி ராகம் இசைக்கிறது.
வாய்ப்பாட்டில் அடங்குவாயா?
வரம்புதாண்டும் செம்மறியாடாவாயா?
காலத்தின் முன் நிற்கிறேன் - நிராயுதபாணியாய்
விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி.

 


1 comment:

  1. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

    //களிப்பாவில் துவங்கிய நம் பயணம் எங்கேயோ
    தளை தட்டி முகாரி ராகம் இசைக்கிறது.
    வாய்ப்பாட்டில் அடங்குவாயா?//

    //மெல்லினமாய் இசையெழுப்பிய நீ இன்று
    வல்லினமாய் மாறி இம்சிக்கிறாய் //

    இவை ரொம்பப் பிடித்த வரிகள்.

    ReplyDelete