Tuesday, January 3, 2012

பேதை மனம்



முத்தாவாய் என சிப்பிக்குள் நீராய்
உனை சேமிக்க
நீராவியாய் போன மாயமென்ன.

வெள்ளை  நிறமென நம்பியிருக்க
வஞ்சிப்பதேன்
நிமிடத்திற்கு நிமிடம் வர்ணம் மாறி.

எவ்விடத்தும் என்னவனாய் நீ இருப்பாய்
என நினைத்திருக்க
எல்லோருக்கும் எல்லாமுமாய் இருப்பதேன்.

உன் அத்துனை பிழைகளையும் தண்டிக்க
விரும்பினாலும்
மனம் மன்னிக்கவே துடிப்பதேன்.

உணர்ந்து வருவாயென
காத்திருக்கிறேன்
அமைதியாய்......
உனக்காக......






1 comment:

  1. மழை நீரை சேகரிக்கும் சிப்பிக்குள் அது ஒரு தவம். துளியாக விழுந்து முத்தாக மாறுவது துளிக்கு கிடைத்த வரம். தவமும் வரமும் சிறக்க வாழ்த்துக்கள். மேகத்தை தொட்டு தாகத்தை தணிக்க தேகத்தை கரைத்துக் கொள்ளும் சீவனின் உயிர்ப்பு மொட்டுக்கள்...., உணர்வு பெறட்டும்.

    ReplyDelete